ENGLISH GRAMMER Thorugh Tamil - SESSION 1 - ACTIVE VOICE & PASSIVE VOICE [செய்வினை & செயபாட்டு வினை]
இதனை விரிவாக படித்து தெரிந்தபின்பு கீழே உள்ள Mock Test மூலமாக தங்களின் கற்றலை பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்..!
முதலில் Subject / Object என்றால் என்ன என்பதனை தெரிந்துகொண்டு பின்னர் Active Voice / Passive Voice-னை பற்றி தெரிந்து கொண்டால் எளிமையாக விளங்கும்.
Subject / Object
- ஒரு செயலைச் செய்பவரே Subject என கருதப்படுவார்.
- அதில் செய்யப்படும் செயலே Verb ஆகும்.
- செய்த செயலை பெறுபவரே Object ஆவார். (அல்லது) இந்த Verb (செயலை) செய்வதற்கு எது முக்கியமாக தேவைப்படுகிறதோ அது தான் Object ஆகும்.
உதாரணத்திற்கு:
I planted a tree.
நான் ஒரு மரத்தை நட்டேன்.
இதில்,
I -->Subject
Plant --> Verb
A Tree --> Object
மேற்கண்ட உதாரணத்தின்படி,
I --> நான் என்பது செய்பவர் - Subject
Plant --> நடுதல் என்பது செயல் - Verb
A tree --> மரம் என்பது செயலை பெறுவது - Object
ACTIVE VOICE & PASSIVE VOICE
[செய்வினை & செயபாட்டு வினை]
அதாவது, ஒரு வாக்கியத்தின் முதலில் Subject வந்தால் அது செய்வினை (Active Voice) ஆகும். அதுவே, ஒரு வாக்கியத்தின் முதலில் Object வந்தால் அது செயபாட்டு வினை (Passive Voice) ஆகும்.
மேலும், இந்த இரு வாக்கியங்களுக்கும் ஒரே பொருள்தான் வரும். இதுதான் மிக முக்கியம்.
Rules of Active Voice:
Subject + Verb + Object
Rules of Passive Voice:
Object + helping verb + 3rd form of Verb + by + Subject
இங்கு helping verb என்பது is, was, were, will, etc.,
3rd form of verb என்பது Participle Form ஆகும். அதாவது, Participle Form என்பது Verb-னை அடிப்படையாக கொண்டு செயல்படும் பங்கேற்பு வாக்கியம் ஆகும்.
ஒரு வாக்கியத்தில் என்னால் (ஆல்), உன்னால் (ஆல்), ஆல் என வரும் இடத்தில் by என்ற சொல் வரும்.
அதே போன்று I என்ற Subject ஒரு வாக்கியத்தின் இருதியில் வரும்போது me என்று மருவி வரும்.
மேலும்3rd form of Verb Means
உதாரணத்திற்கு:
The child broke the toy.குழந்தை பொம்மையை உடைத்தது.
இது Active Voice ஆகும்.
The toy was broken by the child.
பொம்மை குழந்தையால் உடைக்கப்பட்டது.
இது Passive Voice ஆகும்.
மேற்கண்ட இரு உதாரணங்களையும் உற்று நோக்குங்கள்.
முதல் உதாரணம்:
--> குழந்தை என்ற ஒரு Subject பொம்மை என்ற ஒரு Object -னை உடைத்தது(Verb).
--> The Child என்ற ஒரு Subject, the toy என்ற ஒரு Object -னை broke(Verb).
அதாவது, ஒரு வாக்கியத்தின் முதலில் Subject வந்தால் அது செய்வினை (Active Voice) ஆகும்.
இரண்டாவது உதாரணம்:
--> பொம்மை என்ற ஒரு Object குழந்தை என்ற ஒரு Subject -னால் உடைக்கப்பட்டது(Verb).
--> The toy என்ற ஒரு Object, the Child என்ற ஒரு Subject -னால் was broken(Verb).
No comments:
Post a Comment